தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த 4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது.
சென்னை கமலாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நந்தகுமார் (கோவை), மகராஜன் (நெல்லை), சுப்பிரமணியன் (ஈரோடு), தர்மராஜ் (கன்னியாகுமரி) ஆகியோருக்கு இணையமைச்சர் எல் முருகன் இன்னோவா கார்களை பரிசளித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த நிலையில், அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன் உடனிருந்தார்.
இதனிடையே, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு கோவை தெற்கு, திருநெல்வேலி, நாகர்கோவில், மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி, நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், 4 எம்எல்ஏ-க்கள் பெற்று தந்த 4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தலில் 4 எம்.எல்.ஏ.க்களை வென்று சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்துள்ள பாஜக அடுத்ததாக தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…