தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் சகோதரர் அசோக்குமாா் வீட்டிலும் அமலாக்கத்துறையினா் நேற்று காலை 8 மணி முதல் சோதனை செய்துவந்தனர்.
கரூா் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் வீடு,பெற்றோர் வீடு உட்பட பல இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதைபோல் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.17 மணி நேரமாக மேலாக நடைபெற்ற வந்த சோதனை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான பின்பு சோதனை நிறைவுபெற்றுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக நள்ளிரவு 2 மணி அளவில் அழைத்துச்செல்லப்பட்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதன் காரணமாக அவர் சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்கள் வருகை:
சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,மா.சுப்பிரமணியன், சேகர் பாபு,எ.வ.வேலு,ரகுபதி ஆகியோர் வருகை தந்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
அதன் பின்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாஜகவின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது;திராவிட முன்னேற்ற கழகம் மிசாவையே பார்த்தது.செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறினார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி:
செந்தில் பாலாஜியின் கைது விவகாரத்தில் அமலாக்கத்துறையின் செயல் மனிதஉரிமை மீறல் என்றும் அவர் கைது செய்யப்பட்டதில் எந்த விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை.நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுக எம்பி என்ஆர்.இளங்கோவன்:
அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா? கைது செய்யப்பட்டாரா? என்ற எந்த தகவலையும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், எந்த விதிகளையும் அமலாக்கத்துறை பின்பற்றவில்லை எனவும் திமுக எம்பி என்ஆர்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…