மனிதநேயமற்றது ,யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி நடந்து சென்றனர். .அப்பொழுது போலீசார் தடுக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார் ராகுல் காந்தி.இதன் பின் தடை உத்தரவை மீறி ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உள்ள அறிக்கையில்,இந்தியக் கட்சித் தலைவர் ஒருவரை, நாடாளுமன்ற உறுப்பினரை, செயல்பட விடாமல் தடுத்தது மட்டுமல்ல, அவரைப் பிடித்துத் தள்ளுவது, மரியாதைக் குறைவானது, மனிதநேயமற்றது, மிக மிகக் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிகளுக்கும் எதிரானது. இதற்கு உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். திரு.ராகுல் காந்தி அவர்களுக்கே இந்த நிலைமை என்றால், உ.பி.யில் சாதாரண சாமானியர்களின் நிலைமை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
https://www.facebook.com/200887113275448/posts/3583216418375817/
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024