சிதம்பரம் குறித்த தகவல்கள் விசாரணையில் வெளியே வரும் -தமிழிசை
சிதம்பரம் குறித்த தகவல்கள் விசாரணையில் வெளியே வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் பேசுகையில், ப.சிதம்பரம் விவகாரத்தில் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை, சட்டம் என்பது எல்லோருக்கும் சமம்.சிதம்பரம் குறித்த தகவல்கள் விசாரணையில் வெளியே வரும் . காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தான் அனைத்து பொருளாதார குற்றங்களும் நடைபெற்றன.
விஜய் மல்லையா உள்ளிட்டோர் பாதுகாப்பாக இருந்தனர்.காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இவ்விவகாரத்தில் டெல்லியில் திமுக நடத்திய போராட்டம் படுதோல்வியடைந்தது.மருத்துவர்கள் கோரிக்கை நியாயமாக இருந்தாலும், நோயாளிகள் பாதிக்கப்படாதவாறு போராட்டம் இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.