முதியோர் இல்லத்தில் ஒரு மூதாட்டிக்கு தொற்று.! மற்ற மூதாட்டிகள் தனிமை.!

சென்னை போரூர் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் 85 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நாளை மறு நாள் மே 3-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் 161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 48 பேர் கொரோனாவால் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1258 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இந்நிலையில், சென்னை போரூர் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் 85 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இல்லத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025