சட்டப்பேரவையில் இன்றைய விவாதம் – புதிய அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள்!
தமிழக பட்ஜெட் இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இதனிடையே,நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று தொடங்கிய சட்டப் பேரவையில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கிடப்பில் வைத்திருப்பது தொடர்பாக தேவைப்பட்டால் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று முதலைமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழக சட்டப் பேரவையில் இன்று தொழில்துறை,கனிம வளத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.மேலும்,அமைச்சர் துரைமுருகன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் இத்துறை ரீதியான புதிய அறிவுப்புகளை இன்று வெளியிட உள்ளனர்.