தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!
மத்திய அரசின் பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கும் பணி நேற்று விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துவங்கப்பட்டது.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் ஆடை பூங்கா எனும் பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்காவானது தமிழக்த்தில் விருதுநகர் மாவட்டத்தில் அமைக்க நேற்று துவக்க விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
11 நிறுவனங்கள் :
இந்த விழாவில் 11 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின. இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவானது, 2000 ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சிபிகாட் மூலம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தென் மாவட்டத்தில் பலரும் இதன் மூலம் பயன்பெறுவர்.
முதல்வர் பேச்சு :
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆடை தயாரிப்பில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. விருதுநகரில் ஜவுளி மண்டலம், ஆடைப் பூங்கா அமைப்பது மகிழ்ச்சி தருகிறது. தென்மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. எனவும் முதல்வர் பேசினார்.