ஐஎன்டியுசி தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் மாநில தலைவர் டாக்டர் தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஐஎன்டியுசி தேசிய பொதுச்செயலர் டாக்டர் அ. அமீர்கான் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார்.
மேலும், கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்றும், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் நீண்ட காலமாக 1,000 ரூபாய் வழங்குவதை உயர்த்தி 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநில முதன்மை துணைத்தலைவர் டாக்டர் ரகுராமன் , மாநில துணைத் தலைவர் சாதிக் அஹமது , முதன்மை பொதுச் செயலாளர் பிரமோத் பாபு , ஐஎன்டியுசி வாகன தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் புரசை மொய்தீன் , மாநில பொதுச்செயலாளர்கள் நியாஸ் அஹமது , புளியந்தோப்பு பிரசாத் , அருள்ஜோதி , மாநில செயலர் குலாம் மைதீன் , மாநில அமைப்பு செயலாளர் கள் ரங்கநாதன் , முகம்மது முயம்மில் , காமில் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…