10 -ம் வகுப்பு மாணவர்களை போல, தனித்தேர்வர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வரும் நிலையில், பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பரவிவரும் சூழலில், அக். 2- வது வாரத்திற்குள் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
மேலும், 10- ம் வகுப்பு மாணவர்களை போல, தனித்தேர்வர்களையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தனித்தேர்வர்களுக்கான தேர்வு செப்டம்பர் இறுதியில் நடத்தவுள்ளதாகவும், அதன் முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…