இந்திரா காந்தி மகன் ராகுல் காந்தி என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரச்சாரம் செய்யும் அதேவேளையில் முக்கிய தலைவர் சிலர் வாய் உளறி மாற்றி பேசி விடுகிறார்கள்.இப்படி உளறுவது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி உள்ளது.இதனால் அந்த கட்சி சார்பாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை
ஆதரித்து பேசினார் .அப்போது அவர் பேசுகையில்,இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் ராகுல் காந்தி என்று மாற்றி பேசினார்.அதாவது இந்திரா காந்தி மகன் ராஜீவ் காந்தி என்று கூறுவதற்கு பதிலாக மாற்றி பேசினார்.அது மட்டும் அல்லாமல் இதுவரை இருந்த பிரதமர்களில் மிகவும் மோசமான பிரதமர் மன்மோகன் சிங் என்று பேசினார்.நரேந்திர மோடி என்று குறிப்பிடுவதற்கு மன்மோகன் சிங் என்று அவர் பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…