இந்தியாவிற்கு பொதுமொழியா ?நாட்டு மக்களிடத்தில் வேற்றுமையை ஏற்படுத்தும்-கே.எஸ்.அழகிரி கருத்து
சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆங்கிலம் இந்தியாவின் பொது மொழியாக இருந்து வருகிறது.அப்போதைய பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கிலம் பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருக்கும் என்று தெரிவித்தார் . ஆனால் நேரு அவ்வாறு கூறிய பின்பு இந்தியாவில் மொழி பிரச்னை எதுவும் ஏற்படவில்லை.
மீண்டும் இந்தியாவிற்கு பொதுமொழி வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துவது நாட்டு மக்களிடத்தில் வேற்றுமையை ஏற்படுத்தும்.இந்தியாவில் நீண்ட காலமாக ஆங்கிலத்தைப் பேசி வருவதால் ஆங்கிலத்தை கற்றுக் கொள்வது தான் எளிது.எனவே ஆங்கில மொழியை கற்று கொள்பவர்கள் என்பதால் தேசப்பற்று இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது.எனவே மொழி, ஜாதி, மதத்தின் பெயரால் மக்களிடத்தில் வேற்றுமையை பா.ஜ.க. உருவாக்க கூடாது என்று தெரிவித்தார்.