”இந்தியாவின் வழிகாட்டி முதலமைச்சர்”.. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு!
முதலமைச்சர் நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு.
கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்த 10,000 பேர் திமுகா இணைந்தனர். இவ்விழாவில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் மு.பே.சுவாமிநாதன், கயல்விழி செல்வராஜ், காந்தி ஆகியோர் பங்கேற்றியிருந்தனர்.
இவ்விழாவில் பேசிய பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒட்டுமொத்த இந்தியாவின் வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர், நாளை இந்திய தேசத்தை பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளார், நாட்டுக்கு பணியாற்ற இருக்கும், தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் அனைவரும் அணி திரள்வோம்.
மேலும், நாளும் நமதே, நாளையும் நமதே, கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் 1 இடத்தை இழந்தோம். இந்தமுறை அதையும் இழக்காமல் 40 / 40 என்று எண்ணி வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும் நம்முடைய இலக்கு நாடாளுமன்றத் தேர்தல் தான், 40 / 40 என்ற சூளுரைகளை எண்ணி அனைவரும் பணியாற்ற வேண்டும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.