இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம்…!
இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனை கூடம் தொடங்கப்பட்டுள்ளது
ரயில்வே நிர்வாகம், உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை அமைத்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 5000 ரயில் நிலையங்களில் இது போன்ற விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளம்பட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடி மற்றும் வாஞ்சிமணியாச்சியில் மக்ருன், ராமேஸ்வரத்தில் கடல்பாசி பொருட்கள், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விருதுநகர் மற்றும் சாத்தூரில் காரச்சேவு, தென்காசி மற்றும் செங்கோட்டையில் மூங்கில் பொருட்கள் போன்ற விற்பனை செய்யப்படுகின்றன.
உலர் மீன் விற்பனை கூடம்
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனை கூடம் தொடங்கப்பட்டுள்ளது. கருவாடுகள் எந்த வாடையுமின்றி அழகாக பாக்கெட்டுகளில் பேக் செய்து வழங்கப்படுகிறது. இந்த கருவாட்டு கடை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.