இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்து லெட்சுமி அம்மையார் அவர்கள், அவரது தாயார் சந்திரம்மாள் நோயால் மிகவும் அவதிப்பட்டு இறந்து போனார். இதை நேரில் பார்த்த முத்துலட்சுமி ரெட்டி மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியத்தில் 1907 சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். இவர் படிப்பில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல். சிறப்பு சான்றிதழும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார். 1912 ஆம் ஆண்டு முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில், இன்று இவரது 136-வது பிறந்தநாள் ஆகும். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்! பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்!’ என பதிவிட்டுள்ளார்.
பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்!
பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்! pic.twitter.com/hB16jCbrQj
— M.K.Stalin (@mkstalin) July 30, 2021