கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை ஒட்டி, வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடந்த மார்ச், 22ல் இருந்து, ஏப்ரல் 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் பயணக் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு, ரத்தான நாளில் இருந்து, 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது; முழு கட்டணம் திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் சேவை உதவி மைய போன் எண், 139 வழியாக, பயணத்தை ரத்து செய்தவர்களும், 90 நாட்கள் வரை, முழு கட்டணம் திரும்பபெறலாம்.
அதேபோல், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக, முன்பதிவு செய்த பயணியருக்கு, வழக்கமான பரிவர்த்தனை வழியாக, முழு டிக்கெட் கட்டணமும், அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்று விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…