ரத்தான ரயில்களின் பயணக்கட்டணம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்க 90 நாட்கள் அவகாசம்….

Default Image

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை ஒட்டி, வரும் ஏப்ரல் மாதம்  14ஆம் தேதி  வரை, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடந்த மார்ச், 22ல் இருந்து, ஏப்ரல்  14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் பயணக் கட்டணத்தை  திரும்ப பெறுவதற்கு, ரத்தான நாளில் இருந்து, 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது; முழு கட்டணம் திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் சேவை உதவி மைய போன் எண், 139 வழியாக, பயணத்தை ரத்து செய்தவர்களும், 90 நாட்கள் வரை, முழு கட்டணம் திரும்பபெறலாம்.
 அதேபோல், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக, முன்பதிவு செய்த பயணியருக்கு, வழக்கமான பரிவர்த்தனை வழியாக, முழு டிக்கெட் கட்டணமும், அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்று விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்