நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அக்.12ல் தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொடங்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திற்கு அக்.7ம் தேதி சொகுசு கப்பல் வந்தடைந்த நிலையில், அக்.9ல் சோதனையோட்டம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் இந்த சொகுசு கப்பல் போக்குவரத்துக்கு சேவை மூலம் நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு 3 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் செல்லலாம்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு.. நாகை – இலங்கை இடையே சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!
இந்நிலையில், இன்று காலை நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல், தற்போது இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. நாகையில் இருந்து காலை 8.15க்கு பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்த கப்பல் 4 மணி நேரத்தில் காங்கேசன்துறைக்கு சென்றடைந்ததுள்ளது.
தற்பொழுது, இலங்கையிலிருந்து இந்தியா செல்ல பயணிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 பேர் பயணிக்ககூடிய இந்த கப்பலில் முதல் நாள் பயணத்துக்காக 50 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணி ஒருவர் 50 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…