கொரோனா தொற்று உடையவர் வந்து சென்றதால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடல்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடல்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை தமிழகத்தில், 67468 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 866 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, கொரோனா பாதித்த ஒருவர் வந்து சென்றதால், தற்போது அந்த வங்கி மூடப்பட்டுள்ளது. மேலும் கிருமிநாசினி மருந்துகள் அடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.