அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

Fisherman

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 5 நாட்டுப் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான இலங்கை மீனவர்கள் தற்போது நாகை துறைமுகம் அழைத்து வரப்படுகின்றனர்.

அடிக்கடி, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து, மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கம். இந்த முறை அதற்கு மாறாக நடந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்