இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.!
புது டெல்லியில் நேற்று நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். அதில் உரையாற்றிய அவர், இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்ளூர் மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை என்றும், அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும் என்றும் கூறினார். மேலும், பாரம்பரியத்தை மதிப்பது மற்றும் காலனித்துவ அடையாளங்களை அழிப்பது உள்ளிட்ட ஐந்து உறுதிமொழிகளை ஊக்குவிப்பதை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாகஇருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று அமித்ஷா பேசியுள்ளார். இந்தியை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது, இந்தித்திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் செய்துள்ளார்.
“ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாகஇருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்;” என்று அமித்ஷா பேசியுள்ளார்.
இந்தியை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது
இந்தித்திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது pic.twitter.com/JQGusUcEDT
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 5, 2023
இதற்கிடையில் நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டத்தில், அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் 12வது தொகுதி அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.