நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 17 பேர் இறந்து விட்டதால் 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது.இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை அகமதபாத் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் மேல்முறையிடு செய்தது.லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த வந்த லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ,பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல , அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர். எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…