அஷ்வின் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறி இருக்காது.! விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி புகழாரம்.!

Published by
மணிகண்டன்

அஷ்வின் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறி இருக்காது என சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி மையத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார். 

இன்று சென்னையில உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு விளையாட்டில் ஊக்கம் அளிப்பதற்காக கால்பந்து, கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி கூட்டத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அஷ்வினுக்கு நன்றி :

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய அமைச்சர் உதயநிதி , கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி :

அமைச்சர் உதயநிதி பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறி இருக்காது. அவர் தான் முதலில் பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க ஆரம்பிக்க வேண்டும் என முன்னெடுத்தது என குறிப்பிட்டு பேசினார். அதனால் அவருக்கு அமைச்சர் உதயநிதி தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

ராஜஸ்தான் அணி வீரர் :

மேலும், அஷ்வின் தற்போது ஐபிஎஸ் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். அவர் விக்கெட் எடுத்தாலும் நாம் கைதட்டுவோம். நன்கு விளையாடும் வீரர்கள் யாராக இருந்தாலும் தமிழக மக்கள் பாராட்டுவார்கள் என குறிப்பிட்டார். இன்று சாயந்தரம் அவருக்கு ஐபிஎல் போட்டி இருக்கிறது. இருந்தும் நேரம் ஒதுக்கி இந்த விழாவுக்கு வந்ததற்கு நன்றி எனவும் அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார். .

ஊராட்சி கிரிகெட் அணிகள் :

அஸ்வின் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பயிற்சி அளிக்க வருவதாக கூறியுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, 42 கோடி ரூபாய் செலவில் தமிழக ஊராட்சி கிரிக்கெட் அணிகளுக்கு கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் கிட் (விளையாட்டு பொருட்கள்) கொடுக்க உள்ளோம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த விழாவில் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

2 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

2 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

2 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

3 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

3 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

3 hours ago