கோவை கார் வெடிப்பு எதோ ஆபத்து இருப்பதை உணர்த்துகிறது.! இந்.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு பேச்சு.!

Default Image

கோவை கார் வெடிப்பு சம்பவம் என்பது தமிழகத்திற்கு எதோ ஆபத்து வருவதை உணர்த்துவது போல இருக்கிறது. – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவர் நல்லகண்ணு. 

கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக  ஜமேஷ் முபின் உதவியவர்கள் 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி என முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

இது குறித்து சென்னையில் மறைந்த விடுதலைப் போராட்ட வீரர் ப.மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ‘ கோவை கார் வெடிப்பு சம்பவம் என்பது தமிழகத்திற்கு எதோ ஆபத்து வருவதை உணர்த்துவது போல இருக்கிறது. அதனால், தமிழக அரசு உடனடியாக இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நல்லகண்ணு வலியுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்