மொத்தமாக 32 கிலோ தங்கம்…. நடுக்கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்க கட்டிகள் மீட்பு.!

Gold smuggling

32 கடத்தல் தங்க கட்டிகளை இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடலில் இருந்து மீட்டனர். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் அடுத்த மண்டபத்திற்கு சிலர் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட வழித்தடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது படகில் வந்த கடற்படை அதிகாரிகளை பார்த்ததும் நடுக்கடலில் தங்க கட்டைகளை வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படகில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை மீட்பதற்கு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் அதிநவீன கருவிகள் கொண்டு கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் தேடி வந்தனர். நேற்று தங்கக் கட்டிகளையும் கண்டுபிடித்தனர். சுமார் 32 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை நடுக்கடலில் இருந்து அவர்கள் மீட்டனர். இதன் மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்