நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் இரண்டாம் பாகம் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தலைநகர் சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. எனவே இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அந்த பிரமாண்ட செட் அமைக்கப்படுவதற்காக ஊழியர்கள் அதற்கான பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தார்கள்.இந்நிலையில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் திடீரென எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதில் உயிரிழந்தவர்கள் விவரங்கள் குறித்த தகவல்கள் முழுமையாகத் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் சோகமான சூழ்நிலை நிலவி வருகின்றது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…