கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து விவகாரம்… வழக்கு பதிந்தது தமிழக காவல்துறை…

Published by
Kaliraj
பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தும் போது,  எதிர்பாராத விதமாக கிரேன் திடீரென சரிந்து விழுந்த விபத்துக்குள்ளானது .இதில், உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் தரப்பில் தலா ரூ.1 கோடி நிதியுதவியும், லைகா நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான  லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் இந்த விபத்துக்குள்ளனான கிரேனின்  உரிமையாளர், புரொடக்‌ஷன் மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

இன்று 7 நாளை 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் – வானிலை மையம் அப்டேட்.!

இன்று 7 நாளை 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் – வானிலை மையம் அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…

3 minutes ago

இன்னும் 25 நாள் தான்!! முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கும் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தனது…

37 minutes ago

Mr.பீஸ்ட்-ன் ‘சிறப்பான’ சம்பவம்! ஆப்பிரிக்காவில் காலை உணவு திட்டம்!

ஆப்பிரிக்கா : யூ-டியூப் இணையதள பக்கத்தில் 376 மில்லியன் (37.6 கோடி) பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்…

40 minutes ago

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு! மா. கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் கைது!

கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர்…

1 hour ago

KKR vs RCB : ஆரம்பமே அரோகரா.!? முதல் போட்டி நடக்குமா.? வானிலை நிலவரம்…,

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் முதல் போட்டியாக, நாளை (மார்ச் 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட்…

1 hour ago

அடுத்தடுத்து பயங்கரம்! காரைக்குடியில் ரவுடி ஓடஓட விரட்டிக் கொலை!

சிவகங்கை : தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவங்கள்என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ…

2 hours ago