தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவுக்கே இவர் தா……….சூப்பர் ஸ்டார்………இந்தி நடிகர் புகழாரம்….!!
இந்தியாவிற்கே சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் என்று பிரபல பாலிவூட் நடிகர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினிகாந்த் இருவரின் கூட்டணியில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோருடன் இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் முதல் முறையாகத் தமிழில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தி நடிகர் நவாசுதீன் ரஜினியுடனான தனது படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ரஜினிகாந்த் செம ஆச்சரியத்துக்குரிய மனிதர். அவருடன் நடிக்கும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்தவர்களில் நானும் ஒருவன்.வட இந்தியாவின் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட அவரைத் தெரிந்திருப்பது.மேலும் அவர்தான், நாட்டிலேயே பெரிய சூப்பர் ஸ்டார். அவரின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
ஆனால், இதை எதுவுமே பொருட்படுத்தாமல் அவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவரை முதன்முதலில் பார்த்தபோது மிகவும் யதார்த்தமாகப் பேசினார்.அவரும் நம்மைப் போன்றவர்தான் என்று நமக்கே உணர்த்துகிறார். ரஜினிக்கு வடக்கில் இருக்கும் மவுசு எங்கள் ஆட்களுக்குத் தெற்கில் இல்லை இருந்தாலும் பாலிவுட் நடிகர்களான நாங்கள் 20, 25 பேரை கூட அழைத்துக்கொண்டு பெரும் பந்தாவுடன் சுற்றி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
DINASUVADU