உலகளாவிய தரவரிசையில் பின்னடைவை சந்தித்த இந்தியா ..! பாசிச நாடாக மாறுவதாக கனிமொழி ட்வீட்

Published by
Venu
  • உலகளாவிய ஜனநாயக அட்டவணையில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.
  • ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது  என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின்  குடிமக்கள் உரிமை,தேர்தல் நடைமுறை,அரசியல் கலாச்சாரம்,அரசாங்கத்தின் செயல்  மற்றும் அரசியல் கலாச்சாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது.இதற்கான பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit).அந்தவகையில் 2019 ஆம் ஆண்டிற்கான வெளியிடப்பட்ட ஜனநாயகக் குறியீட்டின் பட்டியலில் இந்தியாவை குறைபாடுள்ள ஜனநாயகம் என்று தெரிவித்துள்ளது.குறிப்பாக குடிமக்கள் விவகாரம் தான் ஜனநாயக பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஜனநாயக அட்டவணையில் இந்தியா 10 இடங்கள் சரிந்துள்ளது.கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியா 7.23 புள்ளிகள் பெற்று 41-வது இடத்தில் இருந்தது.எனவே 2019 -ஆம் ஆண்டு 6.90 ஆக குறைந்து  51-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

7 minutes ago

“ஆளுநர் ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்”..திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் தீர்மானம்!

சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…

9 minutes ago

8 இடங்களில் செயின் பறிப்பு : மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது – அண்ணாமலை!

சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…

22 minutes ago

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…

1 hour ago

சண்டே ஸ்பெஷல்..! மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

சென்னை :மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…

1 hour ago

புத்தக காட்சித் திருவிழா : “1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு..” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …

2 hours ago