பிரதமர் மோடி – சீன பிரதமர் ஜின்பிங் சந்திப்பு! மாமல்லபுரத்தை சல்லடை போட்டு சலித்துள்ள போலீசார்!
பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஜின்பிங் ஆகியோர் இன்று சந்திக்க உள்ளனர். சீனா பிரதமர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இன்னும் சில மணி நேரங்களில் சென்னை வர உள்ளனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளும் நேற்று சில தடவை நடந்து முடிந்தது. இதற்கென 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நி நியமித்துள்ளது
சென்னை விமான நிலையத்தில் இருந்து சீன பிரதமர் வரும் சாலைகள்0 அனைத்தும் புதுப்பிக்கப்பட்டது. கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்களால் சுற்று சுவர்களும் அலங்கரிக்கபட்டுள்ளன. மாமல்லபுரம் தற்போது திருவிழா நடக்கும் இடம் போல மாறி உள்ளது.
அதேபோல, கடற்கரை சாலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இந்த சுத்தப்படுத்தும் வேலையை செய்துள்ளனர். மாமல்லபுரத்தில் 2 ஐஜி, 4டிஐஜி, 15 எஸ்பி என மொத்தம் 7500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். குதிரைகள் மூலமாகவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோரத்தில் இந்தியா-சீனா போர்க்கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மாமல்லபுரத்தில் இரண்டு நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மீனவர்கள் கடலுக்குள் செல்லத் இரண்டு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ட்ரான்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடங்கள், அங்கு செயல்படும் நிறுவனங்கள் என அனைத்திலும் தீவிர சோதனை நடைபெற்று உள்ளது. யாரேனும் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளனரா, வெளிநாட்டிலிருந்து யாரும் உள்ளே வந்தார்களா என தீவிரமாக போலீசார் விசாரித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சந்தேகப்படும்படியாக யாரேனும் தென்பட்டால் உடனே காவல் துறைக்கு தகவல் அளிக்கமாறு பொதுமக்களுக்கு காவல்துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.