உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது;பிரதமருக்கு நன்றி..! – மாநில தலைவர் அண்ணாமலை..!

Default Image

காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு,தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு நாளான இன்று,அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை  அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனையடுத்து,பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில்,காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு,தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது! இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு அமைக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி”,என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்