மாநிலங்கள் அடங்கிய கூட்டாட்சி தான் இந்தியா.! சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.!

Default Image

இந்திய அரசாங்கம் என்பது பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்பு தான். – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் 

சென்னை ஐஐடியில் காசி – தமிழ்ச்சங்கம் விழாவுக்கான தொடக்க விழா நடைபெற்றது அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது கூறுகையில், ‘ எந்த ஒரு நாடும் மதம் சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழித்துவிட்டார்கள். அதனை மீட்டெடுக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ‘ என தனது கருத்துக்களை முன்வைத்தார்.

இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் , ‘ இந்திய அரசாங்கம் என்பது பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்பு தான். எல்லை பாதுகாப்பு தவிர அனைத்து பணிகளிலும் மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்படும் விதமாகவே இந்திய அரசமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் கே.பாலகிருஷ்ணன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்