தமிழகத்தில் இதுவரை 9,19,204 பரிசோதனைகள்..இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை.!
இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை-அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இதுவரை 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை எட்டியுள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிய நிலையில் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,087ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் பாதிக்கப்பட்டோர் 1,487 பேர் தமிழகத்தில் கொரோனாவால் இன்று 37 பேர் பலியாகியுள்ளார்கள்.
இதுவரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்க்ளில், 2,37,196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இந்த வைரஸ் பாதிப்பால், 4,25,282 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,699 பேர் உயிரிழந்துள்ளனர்.