இந்தியா – சீனா பிரதமர்கள் சந்திப்பு! மாமல்லபுரத்தின் பேருந்து நிலையம் அதிரடி மாற்றம்!

நாளை மறுநாள் சீன பிரதமர் சென்னைக்கு வருகிறார், பின்னர் இந்திய பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங்க் சந்திப்பு மறுநாள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் இரு நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனால் மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் என அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மாமல்லபுரம் பேருந்து நிலையம் இடம் மாற்றப்பட்டுளள்து. அதாவது, மகாபலிபுரத்திற்கு வரும் பேருந்துகளை ஈசிஆர் சாலையில் உள்ள பூஞ்சேரியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கெடுபிடிகள் காரணமாக மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அளவு குறைந்துள்ளதாகவும், அங்குள்ள தங்கும் விடுதிகளில் 40 சதவீத அளவிற்கு பயணிகள் அளவு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025