தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமையாது என தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, பாஜக கட்சி ஒரு பொருட்டே கிடையாது எனவும் இங்கு திமுக, அதிமுக தான் முக்கியம் எனவும் கூறியுள்ளார். திருமாவளவன் அளித்த பேட்டியில், “வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் பாஜகவுக்கு கடைசியாக இருக்கலாம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்து பாஜவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமையாது, பாஜக கட்சி ஒரு பொருட்டே கிடையாது என்பதோடு இங்கு திமுக மற்றும் அதிமுக தான் முக்கியம்.
நிதிஷ்குமார் எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியது அவருக்கு தான் நஷ்டமாக அமையும், அவர் சில ஆண்டுகள் மேலும் முதல்வராக தொடர வரலாற்று பிழையை செய்துள்ளார், தேர்தலுக்கு பின்னர் அவர் வருத்தப்படுவார் என நினைக்கிறேன். நிதிஷ்குமார் இல்லாவிட்டாலும் கூட ‘இந்தியா’ கூட்டணி வரும் தேர்தலை கம்பீரமாக சந்தித்து சனாதன சக்திகளை வீழ்த்தும்” என்றார்.
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…