நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை..!
தேர்தல் ஆணை விதி முறைகளை மீறி அதிக அளவில் செலவு செய்ததால் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும், என்று சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதிஷியிடம் நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா நாராயணன், சுயேட்சை வேட்பாளர்கள் எம்.சங்கரசுப்ரமணியன் , பி.பாலமுருகன், சிஎம்.ராகவன், எஸ்.மாரியப்பன், வி.திருமுருகன், சுதாகர் பாலாஜி, வி.ராஜிவ் விக்டர் ஆகியோர் மனு அளித்த விபரம்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வி.நாராயணன் வெற்றி பெற்றதாக கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரூ.56 லட்சம் செலவிட்டுள்ளதாகவும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ரூ.34 லட்சம் செலவிட்டுள்ளதாகவும், சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் ரூ.32 லட்சம் செலவிட்டுள்ளதாகவும் இதை தேர்தல் செலவின் கணக்கு பார்வையாளர்களால் கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணை விதிகளின் படி ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரையில் மட்டுமே செலவிட வேண்டும். ஆனால் விதிகளை மீறி முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் செலவினத்தை அதிகமாக செலவு செய்துள்ளார்கள். இதனால் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றிப்பெற்றதை ரத்து செய்ய வேண்டும். என்று சுயேட்சை வேட்பாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.