தமிழகத்தின் வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அங்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் டெபாசிட் தொகையை செலுத்த மது பாட்டிலைகளை சேகரித்து வருகிறார்.
கடந்த நாடளுமன்றம் தேர்தல் நடந்த போது வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்தியாவிலே வேலூர் தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில், வேலூர் தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பை கடந்த 5ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிட 11 ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தனியாக நடக்கும் தேர்தல் என்பதால் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு அதிகம்.
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் செல்லப்பாண்டியன் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அவர் தான் வேட்பாளர் மனு தாக்கலின் போது செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை கட்ட செய்த காரியம் வித்தியாசம் ஆக இருந்துள்ளது. மது பிரியர்கள் சார்பில் போட்டியிடுவதால் அந்த மது பாட்டில்களை சேகரித்து அதன் மூலம் தொகையை சேகரிக்கிறார். அவரது தேர்தல் கோரிக்கைகளில் முக்கியமானது அரசு தரமான மது வழங்க வேண்டும், மதுவை பாதுகாப்பான உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதாகும்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…