ஒமைக்ரானால் பள்ளி,கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!
ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் தவறானது.
கொரோனா வைரஸ் கடந்த ஒன்றை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்பொழுது குறைந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த வைரஸ் இது வேகமாகப் பரவலாம் என்றும் இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது எனவும் இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவைத் தவிர, போட்ஸ்வானா, ஹாங்காங் மற்றும் இஸ்ரேலிலும் Omicron வகைகளின் புதிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படும் என்ற செய்தி பரவி வருகிறது. இதுதொடர்பாக விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என தகவல் தவறானது என தெரிவித்தார்.