கொரோனா பரவல் அதிகரிப்பு…இன்று முதல் ‘மாஸ்க்’ கட்டாயம்…!!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தேதி முதல் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவை கட்டுபடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக் கவசம் கட்டாயம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று முதல் உயர்நீதிமன்றத்திற்கு வரும் அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் காட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். என்றும் உயர்நீதிமன்ற வளாகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நேற்று தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில், மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.