சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் எலிகள் நடமாட்டம்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் எலிகள் நடமாட்டம்.
சேலம் அரசு மருத்துவமனையில், சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பலரும் உயர் சிகிச்சை பெற்று செலகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளில், எலி நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த எலிகள் நோயாளிகளின் உறவினர்களை கடிப்பதாகவும், எலி சாப்பிட்ட உணவை தெரியாமல் உட்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து சேலம் மருத்துவமனை முதல்வரிடம் கேட்ட போது, நோயாளிகள் உணவை சிந்துவதாலும், தற்போது மழைக்காலம் என்பதாலும் எலிகள் நடமாட்டம் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.