அதிகரிக்கும் கொரோனா பரவல்…! ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை கிளையில் நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுக்கும் வண்ணம் சில புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை கிளையில் நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என்று தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராக வேண்டும் என்றும், மற்ற அனைத்து வழக்கு விசாரணையும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையானது ஏப்ரல் 23-ஆம் தேதி வரை தொடரும் என்றும், அதன் பின் கொரோனா பரவலின் நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.