அதிகரிக்கும் கொரோனா – காரைக்காலில் மாஸ்க் கட்டாயம்..!
காரைக்காலில் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம அணிய வேண்டும் என ஆட்சியர் உத்தரவு.
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது சமீப நாட்களாக உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாஸ்க் கட்டாயம்
இந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் காரைக்காலில் முதன்முதலாக கொரோனாவால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காரைக்காலில் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம அணிய வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திரையரங்கம், வணிக வளாகம், மருத்துவமனை, பொதுமக்கள் கூடும் இடங்களில் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.