தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு..!
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, க கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இது குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகத்திற்குள் நூறு விழுக்காடு கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அடிக்கடி, சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும்.
அதிக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும் என்றும், அதில் வெப்பம் அதிகமாக காணப்பட்டால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.