அதிகரிக்கும் கொரோனா தொற்று…! வார இறுதி நாட்களில் ஏற்காடு செல்ல தடை…!

Published by
லீனா

சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,  தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளை சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்கின்றன. எனவே மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 9-ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் சுற்றுலா வருவதற்கு ஆட்சியர் கார்மேகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு வரும் 9-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் தடை நீட்டிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிற நாட்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என்றும், உள்ளூர்வாசிகள் தனிநபர் ஆவணங்களை காண்பித்து செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சட்டப்பேரவை உரையை புறக்கணித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்! – அமைச்சர் சிவசங்கர்

சட்டப்பேரவை உரையை புறக்கணித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்! – அமைச்சர் சிவசங்கர்

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…

30 minutes ago

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய விவகாரம்.. ராஜ்பவன் விளக்கத்தில் மாற்றம் என்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…

39 minutes ago

யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?

சென்னை :  தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…

1 hour ago

கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…

1 hour ago

சட்டப்பேரவை தொடங்கி 3 நிமிடத்திலேயே வெளியேறிய ஆளுநர்.. காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்.!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…

2 hours ago

“அணிக்கு எந்த உதவியும் செய்யல…கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க” – பத்ரிநாத்

சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…

3 hours ago