சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ! இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
சென்னை சிறப்பு அதிகாரி ,மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
தமிழகத்தில் நேற்று மட்டும் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியது.இதனால் அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஏற்பட்டு வரும் கொரனா பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சென்னை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ,மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.