அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ! மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனைமேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை தொடர்ந்து மதுரையிலும் இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனைமேற்கொள்ள உள்ளார்.மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க உள்ளதாகவும் , அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளள்து.