அதிகரிக்கும் கொரோனா ! மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை
மருத்துவ வல்லுநர்களுடன் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 1974 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.19,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 435 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தலைமை செயலகத்தி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் நாளை ஆலோசனை நடத்தி வருகிறார். வருகின்ற 16 மற்றும் 17ஆம் தேதிகளில் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.