உயர்த்தப்பட்ட பெட்ரோல்,டீசலின் வரி ! இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு ?
பெட்ரோல், டீசல் வாட் வரி உயர்வால் எவ்வளவு கூடுதல் வருவாய் கிடைக்கும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருவதால் கச்சா எண்ணையின் விலை கடுமையாக குறைந்து உள்ளது.எனேவ இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது.
ஆனால் ஒரு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.இதற்கு இடையில் தான் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி தற்போது பெட்ரோல் விலை ரூ.75.54 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டீசல் விலை ரூ.68.22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு இடையில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதாவது பெட்ரோல் மற்றும் டீசலின் வரி மாற்றியமைக்கப்பட்டதன் மூலமாக மாநில அரசிற்கு ரூ.25,000 கோடி முதல் ரூ.30,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தவறான செய்திகள் வெளியாகியது.எனவே பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தியதால் மாநில அரசுக்கு நடப்பாண்டில் ரூ.2500 கோடி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறையும் போது மாநிலத்தின் வருவாய்க்கு ஏற்பாடும் பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்படும்.அதேபோல் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது ,நுகர்வோர் மீது வரிவிதிப்பின் மூலம் ஏற்படும் கூடுதல் சுமையும் குறையும் என்று தெரிவித்துள்ளது.