தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 62,650 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 964 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 33 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 357 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று, 40 வயது, அதுற்கு கீழ் உள்ள 5 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். அதில் 31 வயது மற்றும் 29 வயது இளைஞர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…