“தமிழகத்தில் எஸ்சி இட ஒதுக்கீட்டை 21% ஆக உயர்த்துக!” – ரவிக்குமார் எம்.பி.
எஸ்.சி இடஒதுக்கீட்டு அளவை 21% ஆக உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இடஒதுக்கீடு குறித்த பேச்சு வலம்வரும் நிலையில், எஸ்.சி இடஒதுக்கீட்டு அளவை 21% ஆக உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் 2011 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தமுள்ள மக்கள்தொகை 7,21,47,030 எனக் கண்டறியப்பட்டது. அதில் எஸ்சி பிரிவினரின் மொத்த மக்கள்தொகை, 1,44,38,445 ஆகும். அது மொத்த மக்கள் தொகையில் 20.01% ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த அம்மக்களின் எண்ணிக்கையும் உள்ளடக்கினால் அது இப்போது குறைந்து 21% ஆக இருக்கும். எனவே எஸ்.சி வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை 21% ஆக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில்
வளர்ச்சியடைந்த அம்மக்களின் எண்ணிக்கையையும் உள்ளடக்கினால் அது இப்போது குறைந்தது 21% ஆக இருக்கும். எனவே எஸ்சி வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை 21% ஆக உயர்த்த தமிழக அரசு முன்வரவேண்டும்.— Dr Ravikumar M P (@WriterRavikumar) October 6, 2020