அரசின் எச்சரிக்கையை ஏற்காததால் தொற்று அதிகரிப்பு.!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் சிறந்த பலன் கிடைத்துள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயனிடையே, நேற்று முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இதையயடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி. அனைத்து மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியாவிலே மருத்துவ சிகிச்சை அளிப்பதலில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்று பரவியது. இதனால், சென்னையில் பாதிப்பு இருமடங்காக ஆதரித்த வண்ணம் உள்ளது. இதன் விளைவு காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, வேறு இடத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த பேசிய முதல்வர், சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் கொரோனா தொற்று பரவி வருகிறது என்றும் இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என கூறியுள்ளார். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால், சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக கண்டறியப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அவர், கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று முன்பே கணித்து எச்சரிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று குறித்த அரசின் எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை என தெரிவித்தார். பலமுறை அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் வியாபாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். வேறு இடத்திற்கு சந்தையை மாற்ற வேண்டும் என்று கோயம்பேடு வியாபாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டோம் என்றும் அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று கூறுவது தவறு என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் சிறந்த பலன் கிடைத்துள்ளது என முதல்வர் கூறியுள்ளார்.